(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – யொகொஹாமாவில் (Yokohama) தனிமைப்படுத்தப்பட்டிருந்த Diamond Princess கப்பல் ஜப்பானில் இருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Diamond Princess கப்பலில் இருந்தவர்கள் அமெரிக்காவின் இரண்டு விசேட விமானங்கள் மூலம் டோக்கியோவின் Haneda விமான நிலையத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பலில் பயணித்த 40 அமெரிக்க பிரஜைகள் கொரோனாஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
3,700 பயணிகளுடன் பயணித்த Diamond Princess கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கப்பலை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.