ஜப்பானில் ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று(12) வெடித்து எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியுள்ளதுடன் சாம்பலும் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால் எரிமலை பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.