ஜப்பானில் சுமார் இதுவரை 100 பேர் பலி…

ஜப்பானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

தொடர் மழை காரணமாக பலவேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #