ஜப்பான் நாட்டின் போனின் தீவில் இன்று(04) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவுக்கோலில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போனின் நகரில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.