ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(FASTNEWS|COLOMBO) ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று(10) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.