ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு…

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.

ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக முடிவு செய்த அபே, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று நடந்த தேர்தலில் அபே மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகேரு இஷிபா களமிறங்கினார்.

தேர்தல் முடிவில், ஷின்சோ அபேவுக்கு ஆதரவாக கட்சி எம்பிக்கள், உறுப்பினர்கள் என மொத்தம் 553 பேர் வாக்களித்தனர். ஷிகேரு இஷிபா 254 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஷின்சோ அபே மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். இதற்காக அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதன்மூலம் நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெறுவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.