ஜப்பான் வாகனங்களின் விலையில் பாரிய மாற்றம் – சம்பத்

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வாகன விலை அதிகரித்தமை இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வகையான மற்றும் வேறு பிரதான வாகன வகைகளின் விலை ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வற் வரி அதிகரிப்பு காரணமாக வாகன விலைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்