ஜப்பானில் கடும் மழை பெய்து வருவதால் பெரும் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமையினால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை காரணமாக இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.