ஜம்பர் அணியவும் தயார்…

நீதி மற்றும் நேர்மைக்காக ஜம்பர் அணிய நேரிட்டால் ஜம்பர் அணியவும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜெயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கை குறித்து உதய கம்மன்பில ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்குறித்தவாறு நேற்று(27) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

” நீதி, சக்தி, நேர்மைக்காக ஜம்பர் அணிய நேரிட்டாலும் நான் ஜம்பர் அணியவும் தயாராகவே உள்ளேன். எனது வாழ்கையில் திருட்டுத்தனமான கீழ்த்தரமான வேலைகள் நான் செய்ததில்லை. எந்தவொரு விசாரணைக்கும் தான் தயார்.. இது குறித்து தான் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன்.சிலர் வாய்க்கு வந்ததெல்லாம் கூறுகின்றனர். நான் இதற்கு முன்னரும் கூறியுள்ளேன்.. சபாநாயகர் தகுதியில்லை என்றால் நாளையே நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவந்து என்னை நீக்குங்கள் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை”