ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டமானது புறக்கோட்டையில் ஈ.ஏ.குணசிங்க சிலைக்கு அருகாமையில் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் ஹெடில்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த இந்தக் கூட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து முக்கியஸ்தா்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மே தினப் பேரணி எதனையும் நடத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே தினமன்று ஈ.ஏ. குணசிங்க தொடர்பில் நூல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.