ஜான் கெர்ரிக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜான் கெர்ரிக்கு வலது காலில் நேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பாஸ்டன் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக உள்ள ஜான் கெர்ரி, ஜெனீவாவில் இருந்து 30 மைல் தொலைவில், பிரான்ஸ் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில், சைக்கிள் சவாரி மேற்கொண்டார்.

அவருக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கார்களில் சென்றனர். ஒரு இடத்தில் நடைபாதையில் இருந்த பெரிய கல் மீது ஜான் கெர்ரியின் சைக்கிள் மோதியது. அடுத்த விநாடி, ஜான் கெர்ரி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கால் முறிந்தது.

இதையடுத்து அவரின் பாதுகாப்புக்கு வந்த பொலிசார் அவரை உடனடியாக மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன் பாரிசில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் குறித்து தொலைபேசியில் விசாரித்தார்.

மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த விபத்தினால் ஈரான் அனுசக்தி பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. ஜான் கெர்ரிக்கு காலில் பிளேட் அதிகமாக வைக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டியுள்ளது என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ‘ஜோசப் எர்னெஸ்ட்’ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.