ஜாலிய’வுக்கு எதிராக இன்று மீண்டும் பிடியாணை…

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இன்று(05) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்ற வகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மருத்துவத் தேவைக்காக வௌிநாடு செல்ல 8 வாரங்கள் வௌிநாடு செல்ல அனுமதியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்து.

எவ்வாறாயினும் நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#####