ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீளவும் திறந்த பிடியாணை..

ஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(09) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரச பணத்தில் இருந்து மூன்று இலட்சத்து முப்பது ஆயிரம் அமெரிக்க டொலர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.