UPDATE – இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பு தோல்வியில்..

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று(27) ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை வழங்கக் கூடாது என்று கூறி அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

 

————– UPDATE 04:30 PM

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று(27) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகயை வழங்கக் கூடாது என வலியுறுத்தி, 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தாமதமாக நிறைவேற்றப்படுகின்றமை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை என்பன உள்ளிட்ட பல விடயங்களைச் சுட்டிக்காட்டியே குறித்த இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று(27) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தீர்மானத்துக்கு 376 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.

இந்நிலையில், வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)