ஜிசாட்-15 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

தகவல் தொலைத்தொடர்பிற்கான இந்தியாவின் ஜிசாட்-15 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 3 மணி 4 நிமிடங்களுக்கு ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஜிசாட் ஏவப்பட்து. இதனுடன், அரபு நாடுகளின் அரப்சாட் -6பி என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் கால நிலை மாற்றத்தை அறிவதற்காக நவீன தொழில் நுட்பங்களுடன் ஜிசாட்-15 செயற்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ளது.

860 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட் 15 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 116 கிலோ எடை கொண்டதாகவும்.கால நிலை மாற்றம் மற்றும் தகவல் தொடர்புக்காக பயன்படும் வகையில் நவீனத் தொழில் நுட்பத்தில் ஜிசாட் 15 வடிவமைக்கப்பட்டுள்ளது.