ஜிம்பாப்வேவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் சவாலாக இருக்கும் என இந்திய அணி கெப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது.
கெப்டன் டோனி, வீராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, தவான், அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ரஹானே தலைமையிலான இந்திய அணி ஜம்பாவே அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா– ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஹராரேயில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து கெப்டன் ரஹானே கூறுகையில்;
“வங்காளதேசத்தில் கிடைத்த தோல்வி எங்களுக்கு கடந்த காலம். தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிந்தித்து வருகிறோம். எங்கள் பழைய ஆட்டத்திறனை திரும்ப பெறுவதே எங்களது நோக்கம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெறுவோம்.
ஜிம்பாப்வே சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். சமீபகாலமாக அந்த அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், இத்தொடர் சவாலாக இருக்கும் என்று கருதுகி்றேன். எனவே அவர்களை (ஜிம்பாப்வே வீரர்களை) எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.
(riz)