ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதில் சர்ச்சையில் சிக்கினார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த பிறகு மீண்டும் சோதனைக்குட்படுத்தலாம்.