ஜீ.எஸ்.பி வரிச்சலுகை 19ம் திகதி முதல் அமுலுக்கு..

இம் மாதம் 19ம் திகதி முதல் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களில் சில ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைப் பொருட்கள் 7,500க்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கையின் மொத்த ஏற்றுமதியின் 50% இற்கும் அதிகமான பொருட்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வரும் நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

(rizmira)