ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியினைத் தேடிச்சென்று வாழ்த்திய டோனி

இந்திய ஒரு நாள் அணியின் கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி வீராங்கனைகளை பயிற்சியின் போது சந்தித்து வாழ்த்து கூறினார்.

வருகிற ஜூலை 18 முதல் 26-ம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட வீராங்கனைகளுக்கான ‘வால்வோ இண்டர்நேஷனல்’ மற்றும் சீனாவில் நடைபெறவுள்ள ‘7-வது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை’க்காக புதுடெல்லியில் உள்ள மேஜர் த்யான் சந்த் ஸ்டேடியத்தில் இந்திய வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியை முன்னிட்டு தனிப்பட்ட பயிற்சிக்காக அங்கு வந்திருந்த தோனி, வரவிருக்கும் போட்டிகளில் இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியினர் வெற்றிபெற வாழ்த்தினார்.