ஒவ்வொரு வருடமும் ஜூலை 01ம் திகதி மாற்றம் செய்யப்படும் பேரூந்து கட்டணங்கள் இம்முறையும் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்படி ரூ.9 ஆகவுள்ள கட்டணம் ரூ.10 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை பேரூந்து கட்டண முறையில் சிறு அதிகரிப்பே நிகழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.