திரைப்பட நடிகை ஜெனிலியா மீது எனக்கு காதல் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் வீராட் கோஹ்லி அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், நட்சத்திர ஆட்டக்காரருமான வீராட் கோஹ்லி பிரபல திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த சங்கதியே…
வீராட் கோஹ்லி விளையாடும் போட்டிகளை அவர் காதலி அனுஷ்கா நேரில் கண்டுகளிப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் வீராட் கோஹ்லி அளித்த பேட்டி ஒன்றில் பிரபல திரைப்பட நடிகை ஜெனிலியா மிகவும் அழகானவர் என கூறியுள்ளார்.
மேலும், தனக்கு ஜெனிலியா மீது காதல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வீராட் கோலியும் ஜெனிலியாவும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.