ஜெனீவா பயணத்திற்காக 20 மில்லியன் செலவாம்..

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜெனீவா விஜயமான அரசாங்கப் பிரதிநிதிகளுக்காக சுமார்வ் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரதிநிதிகளுக்கான தங்குமிட வசதிகளை ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதரகமானது, மனித உரிமைப் பேரவைக்கு எதிரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்துள்ளது.

ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விசேட கொடுப்பனவு தொகையொன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.