தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, சிவகார்த்திகேயன் பின்வாங்கியதால் ஜெய் மற்றும் சந்தானத்துடன் இணையவிருக்கிறார்.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலைக்காரன்’ படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 29-ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படம் வெளியாகும் நாள் தள்ளிப்போக இருப்பதாக கூறப்படுகிறது.
சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் இருந்து வேலைக்காரன் படம் வெளியேறும் பட்சத்தில், நயன்தாராவின் அறம் அந்த இடத்தை நிரப்ப முடிவு செய்திருக்கிறது.
ஏற்கனவே ஜெய்யின் `பலூன்’, சந்தானத்தின் `சர்வர் சுந்தரம்’ படமும் அதேநாளில் தான் வெளியாக இருக்கிறது. இதன்மூலம் ஜெய் மற்றும் சந்தானம் படங்களுடன் நயன்தாரா படமும் இணையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.