ஜேவிபி இனது மக்கள் ஆர்ப்பாட்டம் நுகேகொடயில் ஆரம்பமாகியது…

´சதித்திட்டங்னை தோற்கடித்து ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் பலத்தை உருவாக்குவோம்´ எனும் தொனிப்பொருளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நுகேகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.