ஜே.வி.பி இருக்கும் வரையில் இனமோதலுக்கு இடமளியேன் – அநுர

தமது கட்சி அரசியலில் இருக்கும்வரை மீண்டும் ஒரு இனவாத மோதல் நாட்டில் உருவாக்க இடமளிக்கப் போவதில்லையென ஜே.வி. பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் தெற்கிலும் பல சந்தர்ப்பங்களில் சமாதானம் சீர்குழைந்தது. வடக்கு மண்ணில் கண்ணீரும் இரத்தமும் வலிந்தேடியிருக்கிறது. எண்ணிலடங்கா மக்கள் இறந்துள்ளனர்.
மக்களின் உடமைகள் அழிவடைந்துள்ளன. எனவே இந்நாட்டில் மீண்டும் ஒரு இன மோதல் வேண்டாம்.
தமது கட்சி அரசியலில் செயற்படும் வரை இன மோதல்களுக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லையென என அவர் மேலும் குறிபிபட்டார்.