(FASTNEWS|COLOMBO) – ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்பிக்கையை இல்லாது செய்த அரசாங்கத்தை தோற்கடிக்கும் வீதி போராட்டம்’ இன்று மொரட்டுவ நகரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
குறித்த இந்த போராட்டம் பிற்பகல் 3 மணியளவில் நுகோகொடையை சென்றடையவுள்ளதுடன், இதன்பின்னர் அங்கு பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்காநாயக்க தெரிவித்துள்ளார்.