ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடனான போட்டிகள் இரண்டிலிருந்து நீக்கம்…

உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடன் நாளை(23) இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 27ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டியிலும் விளையாட மாட்டார் என இங்கிலாந்து அணியின் முகாமைத்துவம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பயிற்சியின் போது, வலது பாதத்தின் கணுக்கால் பகுதியில் உபாதைக்கு உள்ளாகியிருந்ததால் கடந்த சனியன்று(20) இலங்கை அணியுடனான நான்காவது போட்டியில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.