அரசியல் நடவடிக்கைகளுக்காக சதொச பணியாளர்கள் 153 பேரை பயன்படுத்தி அரசுக்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 5 வழக்குகள் இன்று(24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய 3 மாத காலம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வளாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பின்னர் குறித்த வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.