ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல்…

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை எதிர்வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.