(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
டால்கம் பேபி பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை அடுத்த வருடம் நிறுத்தவுள்ளதாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) அறிவித்துள்ளது.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பேபி பவுடர் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெடாஸ் என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது.
இந்த பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பேபி பவுடர் 2023ம் ஆண்டில் உலகளவில் விற்பனை செய்வதை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான நுகர்வோர் வழக்குகளை தொடர்ந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
உலகளவில் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்புக்கு நாங்கள் மாறுவதாக முடிவெடுத்துள்ளோம். சோள மாவு அடிப்படையிலான பவுடர் ஏற்கனவே உலகங்கிலும் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
நிறுவனம் சுமர் 38,000 வழக்குகளை நுகர்வோரிடமிருந்து பெற்றுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ஜே & ஜே, இந்த பவுடர் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனினும் முன்னதாக சில பிரச்சனைகளுக்கு மத்தியில் 3.5 பில்லியன் டொலர் செலவுகளையும் எதிர்கொண்டுள்ளது. இதில் 22 பெண்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டிலேயே ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தனது பேபி டால்க் பவுடரை அமெரிக்காவிலும், கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்தியது. இது சட்ட ரீதியாக பல சவால்கள் எழுந்த நிலையில் பல பாதுகாப்பு குறித்தான தகவல்கள் வெளியானது. இதனால் தேவை வெகுவாக குறைந்தது.