முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று(11) அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய நவம்பர் 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிட்டிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2010 – 2015 காலப்பகுதியில் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபருக்கு நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.