ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க திகதி நியமிப்பு…

2010 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளும் எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(21) திகதி நியமித்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குறித்த இந்த 5 வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)