ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக, அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் பணம் செலுத்தாமல் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூவருக்கு எதிரான வழக்கு, குருநாகல் மேல் நீதிமன்றத்தில் இன்று(29) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது குறித்து மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகள் மூவரும் முன்வைப்பு ரொக்கப்பிணையின் ஊடாகவும் ஒரு பிரதிவாதியை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது