ஜோன்ஸ்டன், லக்ஷ்மன்,அருந்திக – இலங்கைக்கு எதனோல் கொண்டு வரும் எஜண்டுக்கள்..

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற அமர்வில் தான் பங்கேற்காத வேலைகளில் தன்னைப் பற்றி அதிகளவு கதைகள் இடம்பெறுவதாக இறுதி பாராளுமன்ற அமர்வில் மாலை வேளையில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.

கொக்கென் தொடர்பில் தனக்கு அதிகளவு ஏசுவதாக தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கியிருந்தார்.

அவரது உரையில்;
“கொக்கென் தொடர்பில் 06 மாதங்களுள் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் என்னில் தொடங்குங்கள்.. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் அவர்களை சோதியுங்கள்..அதன்பின்னர் ஏனையோர் ஒவ்வொருவராக பரிசோதனைக்கு உள்ளாக்குங்கள்.

மிளகாய் தூள், கைத்தடி கொண்டு சபாநாயகரை தாக்க முயன்றனர். அப்போது இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டா இருந்தார்கள் என்ற சந்தேகம் கட்டாயம் நிலவுகிறது..? அதனால் தான் நான் கூறினேன் பரிசோதனை அவசியம் என்று…”

“எமது நாட்டுக்கு எதனோல் கொண்டு வருபவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் உள்ளனர். அதில் மூவர் எதிர்கட்சியினை சேர்ந்தவர்கள், ஒருவர் எமது ஆட்சியின் பக்கத்தவர்.. எனக்கு ஊர் பெயரினை வெளியிட முடியும்”

“எதனோல் கொண்டு வருபவர்களில் எதிர்கட்சியில் மூவர் உள்ளனர். லக்ஷ்மன் வசந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அருந்திக பெர்னாண்டோ.. “ என தெரிவித்திருந்த நிலையில் ஆட்சியின் பக்கம் உள்ளவரின் பெயரினை கூறாது உரையினை நிறைவு செய்திருந்தார்.