பொதுபல சேனா அமைப்பின் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனே முன்னிலையில் இன்று(13) செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
(2ம் இணைப்பு)
வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனித அல்-குர்ஆன் இற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த விடயங்கள் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று(12) விசாரணைக்கு வந்தது. இதன்போது குறித்த மூவரும் ஆஜராகத் தவறியமையால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.