நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 05ம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று(28) தீர்மானித்துள்ளது.
குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இன்றைய தினம் நீதியரசர்கள் குழாம் சரியாக ஒழுங்கமைக்கப்படாமையால் மனுவை ஒக்டோபர் 05ம் திகதி வரை பிற்போடுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது
கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.