நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது பல சேனா அமைப்பின் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரினை மறைத்து வைத்திருப்பது ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க என லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண இன்று(12) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
பத்திரிகை ஊடகங்களும் குறித்த தேரரினை மறைத்து வைத்திருப்பது யாரென்று தெரியப்படுத்த முன்வராதவிடத்து தான் அதனை அம்பலப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஞானசார தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கிட்டிய உறவு உள்ளதாகவும் குறித்த தேரர் ஜாதிக ஹெல உறுமயவில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
ஞானசார தேரர் ஜாதிக ஹெல உறுமயவின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக 2014ம் ஆண்டு போட்டியிட்டிருந்தார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.