ஞானசார தேரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினை – சத்திர சிகிச்சையும் பிற்போடப்பட்டது…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினைக் காணப்படுவதால், அவருக்கான சத்திர சிகிச்சை இன்று(13) மேற்கொள்ளப்படவில்லையென, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர் குழுவினரால் ஞானசாரரின் இதயத்துடிப்புத் தொடர்பில் 48 மணி நேரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே அவரது சத்திர சிகிச்சைக்கான திகதி குறிப்பிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.