ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையும் வெளியிடவில்லை

(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் வெளியிடப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல் தனியாய தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.