பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தன்னை அச்சுறுத்தியதாக கூறி வட்டரக்க விஜித தேரரால் கொழும்பு கோட்டை பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக ராஜகிரியவில் இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் சங்கைக்குரிய மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலக காரியாலயத்திற்கு முன்னர் தன்னை அச்சுறுத்தியதாக கூறியே குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் மாகல்கந்தே தேரர் கூறியிருந்தார்.
அதன்படி, அது குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க ஞானசார தேரருக்கு கோட்டை பொலிசிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் வெளிநாட்டில் உள்ளமையால் சமூகமளிக்க முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)