06 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் நேற்று(09) ராஜகிரிய நாவல வீதியில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ சத்டர்மராஜித விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
வாய்மொழியாக கோரப்படும் குறித்த கோரிக்கையினை எழுத்து மூலமாக முன்வைக்க உள்ளதாகவும், இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில் ஒன்றினை வழங்குவார் என மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினரின் எதிர்பார்ப்பு எனவும் தேரர் இதன்போது தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரர் கொலையோ அல்லது குழப்பம் விளைவிக்கவோ இல்லை என்று தெரிவித்த சுதந்த தேரர், அவர் நீதிமன்றினை அவமதிக்கவில்லை என தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.