ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார்….?

நீதிமன்றத்தை அவமதித்தாரென்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் தேசிய தினமான திங்கட்கிழமை(04) விடுதலை செய்வதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதிக்குக் கிடைத்தால், அவரை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.

தேசிய தினம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விளக்கும் ஊடகச் சந்திப்பொன்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(23) இடம்பெற்ற போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, சுதந்திர தினமன்று விடுதலை செய்யுமாறு சகல பெளத்த அமைப்புக்களும் ஜனாதிபதிக்கு அண்மையில் கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அநேகமாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என பெளத்த அமைப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.