பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்திருந்தார்.
மகா சங்கத்தினரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.