ஞானசார தேரருக்கு ஜப்பான் அரசினால் 03 வருட காலத்திற்கு இலவச விசா…

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 03 வருடங்களுக்கான காலத்திற்கு ஜப்பான் அரசினால் விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மதப் பிரச்சாரங்களுக்காக கடந்த 09ம் திகதி குறித்த தேரர் ஜப்பான் நாட்டிற்கு விஜயமாகி இருந்ததாகவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில், மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே குறித்த விசா அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், 03 மாத காலத்தினுள் முதல் தடவையாக செல்லாது இருந்தால் குறித்த 03 வருட கால விசா நிராகரிக்கப்படும். அதனாலேயே தேரர் அண்மையில் ஜப்பான் நோக்கி பயணமாகினார் என தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினால் குறித்த பயணம் பிற்போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 07ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், கண்டியில் இடம்பெற்ற வன்முறையினால் குறித்த பயணம் 09ம் திகதி பிற்போட சந்தர்ப்பம் அமைந்திருந்ததாகவும் பொதுபல சேனா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.