ஞானசார தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி…

கலகொடஅத்தே  ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று(22) இரண்டாவது தடவையாக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆராயப்பட போது, அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மேலும்,  அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி குறித்த மேன்முறையீட்டு ஆராயப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அன்று  சமூகமளிக்காததன் காரணமாக அது தொடர்பான ஆராய்வு இன்று பிற்பகல் 2 மணி வரை பிற்போடப்பட்டமையும்  குறிப்பிடதக்கது.