பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் கடந்த மே 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.