முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பின் கீழ் செயற்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது ஜப்பான் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜயதாசவின் பதவி நீக்கத்துடன் திடீர் என மௌனித்துப் போன ஞானசார தேரர் கடந்த 01ம் திகதி போலி கடவுச்சீட்டில் ஜப்பான் பயணமாகியுள்ளார்.
குறித்த போலிக் கடவுச்சீட்டினை பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களில் ஒருவரான உலபனே சுமங்கல தேரர் உதவியுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது குறித்த இருவரும் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் தற்போது வசிப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(riz_mira)