ஞானசார தேரரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பு – தண்டனை 14ம் திகதி…

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதாக கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாக ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று(24) தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, இன்று(24) அவரது கைவிரல் ரேகை பெற்றுக் கொள்ளவும், எதிர்வரும் ஜூன் 14ம் திகதி அவரை அடையாளப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்கலுக்கு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொடவினை அச்சுறுத்தியதாக ஞானசாரருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.