ஞானசார தேரர், இன்றும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை – விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம்..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று(31) மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகாத நிலையில் அவரது வழக்கினை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் உடல் நிலை காரணமாக அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் இன்று(31) ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்த நிலையில் அவர் இன்றும் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)