Update – ஞானசார தேரருக்கு 06 வருட கடூழிய சிறைத் தண்டனை…

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு குறித்த மனு இன்று(08) வாதத்துக்கு எடுத்துக் கொண்ட நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

r.Rishma